Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

சங்கீதங்கள் 54

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

1 தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து,

உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும்.

2 தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும்.

3 அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்;

கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்;

தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)

4 இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்;

ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.

5 அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார்,

உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும்.

6 உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்;

யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது.

7 அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்;

என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.

சங்கீதங்கள் 54