Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

சங்கீதங்கள் 24

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தாவீதின் பாடல்.

1 பூமியும் அதின் நிறைவும்,

உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை.

2 ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,

அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார். 3 யார் யெகோவாவுடைய மலையில்a ஏறுவான்?

யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்?b

4 கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து,

தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும்,

பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே.

5 அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும்,

தன்னுடைய இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.

6 இதுவே அவரைத் தேடி விசாரித்து,

அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா)

7 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;

நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.

8 யார் இந்த மகிமையின் இராஜா?

அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா;

அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே.

9 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;

நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.

10 யார் இந்த மகிமையின் இராஜா?

அவர் சேனைகளின் யெகோவா;

அவரே மகிமையின் இராஜா (சேலா).

Translator’s notes

  1. 24:3 (a): இந்த மலையின் மேல் தான் தேவாலயம் கட்டப்பட்டிருந்தது. சீயோன் மலையில் ஏறி ஆலயத்தில் பிரவேசித்தது ஆண்டவரை ஆராதிப்பதாகும்
  2. 24:3 (b): நிலைநிற்பான்

சங்கீதங்கள் 24