Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

சங்கீதங்கள் 14

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

1 தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்;

நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,

யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார்.

3 எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;

நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.

4 அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ?

அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே;

அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை.

5 அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்;

தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே.

6 ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால்,

நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள்.

7 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;

யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,

யாக்கோபுக்குச் சந்தோஷமும்,

இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

சங்கீதங்கள் 14