Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

சங்கீதங்கள் 140

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.

1 யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்;

கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்.

2 அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து,

யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.

3 பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்;

அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)

4 யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி

கொடியவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்;

அவர்கள் என்னுடைய நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.

5 பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும்

கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்;

வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)

6 நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்;

யெகோவாவே, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்குச் செவிகொடும்.

7 ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே,

யுத்தநாளில் என்னுடைய தலையை மூடினீர்.

8 யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்;

அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா)

9 என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக. 10 நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக;

நெருப்பிலும், அவர்கள் எழுந்திருக்கமுடியாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.

11 பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை;

கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.

12 சிறுமையானவனின் வழக்கையும்,

எளியவர்களின் நியாயத்தையும் யெகோவா விசாரிப்பாரென்று அறிவேன்.

13 நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்;

செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.

சங்கீதங்கள் 140