73 Bible Verses About Praise

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

Bible Verses About Praise
  1. தாவீதின் பாடல்.

    1 என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று;

    என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று.

    2 என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்;

    அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே.

    3 அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து,

    உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி,

    4 உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு,

    உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,

    5 நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்;

    கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது.

  2. 11 பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றியிருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது. 12 அவர்களும் அதிக சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருக்கிறார் என்று சொன்னார்கள். 13 அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். 14 அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

  3. 15 ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம். 16 அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார்.

  4. தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடிய பாடல்.

    1 யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்;

    அவர் துதி எப்போதும் என்னுடைய வாயில் இருக்கும்.

    2 யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்;

    ஒடுக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.

    3 என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்;

    நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.

    4 நான் யெகோவாவை தேடினேன்,

    அவர் எனக்குச் செவிகொடுத்து,

    என்னுடைய எல்லாப் பயத்திற்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.

  5. 22 அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு விரோதமாக வந்தார்கள். அதிகாரிகள் அவர்களுடைய ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி; 23 அவர்களை அதிகமாக அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாகக் காவல்காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளைக் கொடுத்தார்கள். 24 அவன் இப்படிப்பட்டக் கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உள்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான். 25 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

  6. தாவீதின் நன்றிப்பாடல்.

    1 ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி,

    உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன்.

    2 நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி,

    எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.

    3 யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்;

    அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.

    4 தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி,

    உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.

  7. 3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவிற்குள் உன்னதங்களிலே ஆவியானவருக்குரிய எல்லா ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். 4 அவருக்கு முன்பாக நாம் எல்லோரும் பரிசுத்தம் உள்ளவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருப்பதற்கு, உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே கிறிஸ்துவிற்குள் அவர் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, 5 பிரியமானவருக்குள் அவர் நமக்கு அருளிய அவருடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, 6 அவருடைய தயவுள்ள விருப்பத்தின்படியே, இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவருக்குச் சொந்த பிள்ளைகளாகும்படி நம்மை முன்குறித்திருக்கிறார்.

  8. 18 பொல்லாதவழிக்கு உன்னைக் கொண்டுச்செல்லும் மதுபானத்தை நீ குடித்து வெறிகொள்ளாமல், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து; 19 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்தில் கர்த்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, 20 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,

  9. 16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி; 17 வார்த்தையினாலாவது செயல்களினாலாவது, நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

  10. 4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து,

    அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.

    5 யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும்,

    அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

  11. 8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் ஆறுஆறு சிறகுகள் உள்ளவைகளும், சுற்றிலும், உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாக இருந்தன. அவைகள்:

    “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்

    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று இரவும் பகலும் ஓய்வு இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. 9 மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,

    10 இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து:

    11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும்

    வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குத் தகுதி உடையவராக இருக்கிறீர்;

    நீரே எல்லாவற்றையும் படைத்தீர்,

    உம்முடைய விருப்பத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும்

    படைக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது” என்றார்கள்.

  12. 5 பின்பு லேவியர்களான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் மக்களைப் பார்த்து: நீங்கள் எழுந்து, என்றும் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, யெகோவாவை நோக்கி: எல்லா துதி ஸ்தோத்திரத்திற்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்திற்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. 6 நீர் ஒருவரே யெகோவா; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மை பணிந்துகொள்ளுகிறது.

  13. 3 உயிரைவிட உமது கிருபை நல்லது;

    என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும்.

    4 என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து,

    உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன்.

    5 நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்;

    என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.

    6 என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது,

    இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.

    7 நீர் எனக்குத் துணையாக இருந்ததினால்,

    உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன்.

    8 என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது;

    உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.

  14. 1 யெகோவாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது முந்தின ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.

  15. 1 யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி,

    நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள்.

    2 துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து,

    பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம்.

    3 யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார்.

    4 பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது;

    மலைகளின் உயரங்களும் அவருடையவைகள்.

    5 கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்;

    காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது.

    6 நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக

    நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள்.

    7 அவர் நம்முடைய தேவன்;

    நாம் அவர் மேய்ச்சலின் மக்களும்,

    அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.

  16. 4 இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் முகங்குப்புறவிழுந்து:

    ஆமென், அல்லேலூயா,” என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

    5 மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரர்களே,

    அவருக்குப் பயப்படுகிற சிறியோர்களே பெரியோர்களே,

    நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்”

    என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து வந்தது.

    6 அப்பொழுது திரளான மக்கள் போடும் ஆரவாரம்போலவும்,

    பெரியவெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி:

    அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.

  17. 9 நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து

    தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய

    புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும்,

    ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும்,

    அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.

  18. 6 யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்;

    அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.

    7 யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்;

    என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்;

    ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது;

    என் பாடலினால் அவரைத் துதிப்பேன்.

  19. 21 அதற்கு இயேசு: பெண்ணே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவை ஆராதிக்கும்காலம் வருகிறது. 22 நீங்கள் அறியாததை ஆராதிக்கிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதை ஆராதிக்கிறோம்; ஏனென்றால், இரட்சிப்பு யூதர்கள்வழியாக வருகிறது. 23 உண்மையாக ஆராதிக்கிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் ஆராதிக்கிறவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 24 தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார். 25 அந்த பெண் அவரைப் பார்த்து: கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். 26 அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.

    27 அந்தநேரத்தில் அவருடைய சீடர்கள் வந்து, அவர் பெண்ணுடனே பேசுகிறதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும் என்ன வேண்டும் என்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீர் என்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. 28 அப்பொழுது அந்த பெண், தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேப்போய், மக்களைப் பார்த்து:

  20. 10 தேவதூதன் அவர்களைப் பார்த்து: பயப்படாமலிருங்கள்; இதோ, எல்லா மக்களுக்கும் மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். 11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். 12 குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்திருப்பதைப் பார்ப்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். 13 உடனே பரலோக தூதர்சேனையின் கூட்டம் தோன்றி, அந்தத் தூதனோடு சேர்ந்து:

    14 “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும்,

    பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.

  21. 28 என் நாவு உமது நீதியையும்,

    நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.

  22. 30 தேவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து,

    அவரை நன்றி சொல்லி மகிமைப்படுத்துவேன்.

    31 கொம்பும் விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட,

    இதுவே யெகோவாவுக்குப் பிரியமாக இருக்கும்.

    32 சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்;

    தேவனைத் தேடுகிறவர்களே, உங்களுடைய இருதயம் வாழும்.

  23. 4 பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும்

    யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள்.

    5 சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள்,

    சுரமண்டலத்தாலும் பாடலின் சத்தத்தாலும் அவரைப் புகழ்ந்துபாடுங்கள்.

    6 யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும்

    எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்.

  24. 33 நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்;

    நான் உயிரோடிருக்கும்வரையும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.

    34 நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்;

    நான் யெகோவாவுக்குள் மகிழுவேன்.

  25. 6 சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக.

    அல்லேலூயா.

  26. 33 அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாகக்

    காட்டுமரங்களும் முழக்கமிடும்;

    அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.

    34 யெகோவாவை துதியுங்கள்,

    அவர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது.

    35 எங்கள் இரட்சிப்பின் தேவனே,

    நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி,

    உம்மைத் துதிப்பதால் மேன்மைபாராட்டும்படி, எங்களை இரட்சித்து,

    எங்களை சேர்த்துக்கொண்டு, மற்ற தேசங்களுக்கு எங்களை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லுங்கள்.

    36 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு

    சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக;”

    அதற்கு மக்கள் எல்லோரும் ஆமென் என்று சொல்லிக் யெகோவாவை துதித்தார்கள்.”

  27. 68 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

    69 அவர் நம்முடைய முற்பிதாக்களுக்கு

    வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;

    70 தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி:

  28. 19 பின்பு இரவுநேரத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினான். 20 பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்திற்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது. 21 அவர் காலங்களையும் நேரங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். 22 அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். 23 என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்ததினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான்.

  29. முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

    1 யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்;

    உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.

  30. 13 யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்;

    அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.

  31. 1 நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்;

    துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும்.

    2 சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து,

    பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள்.

    3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;

    ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள்.

  32. 7 என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது,

    தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன்.

    8 என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்;

    அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.

    9 ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;

    தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

    10 உமது கிருபை வானம்வரையும்,

    உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது.

  33. 1 என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று;

    என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்;

    மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.

  34. 1 அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்;

    யெகோவாவின் ஊழியக்காரர்களே, துதியுங்கள்.

    2 யெகோவாவுடைய வீட்டிலும்,

    நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே,

    யெகோவாவை துதியுங்கள்.

    3 யெகோவா நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்;

    அது இன்பமானது.

    4 யெகோவா யாக்கோபைத் தமக்காகவும்,

    இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.

  35. 1 அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே,

    யெகோவாவை துதி.

    2 நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்;

    நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.

  36. 1 யெகோவாவை துதியுங்கள்;

    நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது,

    துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.

  37. 10 கடலில் பயணம்செய்கிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள். 11 வனாந்திரமும், அதின் ஊர்களும், கேதாரியர்கள் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடுவதாக; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, மலைகளின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக. 12 யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.

  38. 13 உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் செய்யவேண்டும்; ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் சங்கீதம் பாடவேண்டும்.

  39. 11 யெகோவாவே,

    தெய்வங்களில் உமக்கு ஒப்பானவர் யார்?

    பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும்,

    அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

  40. 3 எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்;

    வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

    4 தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்;

    யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

    5 ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்;

    பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.

  41. 3 ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று சத்தமிட்டுச் சொன்னார்கள்.

  42. 4 துதிக்குக் காரணரான யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்;

    அதனால் என்னுடைய எதிரிகளுக்கு விலக்கி இரட்சிக்கப்படுவேன்.

  43. ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல்.

    1 யெகோவாவே,

    என்னுடைய எதிரிகள்

    என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல்,

    நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால்,

    நான் உம்மைப் போற்றுவேன்.

    2 என் தேவனாகிய யெகோவாவே,

    உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்,

    என்னை நீர் குணமாக்கினீர்.

    3 யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து,

    நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர்.

    4 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே,

    அவரைப் புகழ்ந்துபாடி,

    அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.

  44. இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல்.

    1 தேவனே, பூமியில் உம்முடைய வழியும்,

    எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக,

    2 தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து,

    உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா)

    3 தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;

    எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.

    4 தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்;

    ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து,

    கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா)

  45. 14 நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து,

    மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.

    15 என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்;

    அவைகளின் தொகையை நான் அறியவில்லை.

  46. 1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;

    பூமியின் குடிகளே, எல்லோரும் யெகோவாவைப் பாடுங்கள்.

    2 யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி,

    நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாக அறிவியுங்கள்.

    3 தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும்,

    எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.

    4 யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்;

    எல்லா தெய்வங்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

  47. 1 யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள்,

    அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

    2 அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்;

    அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

    3 அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்;

    யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

    4 யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்;

    அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள்.

    5 அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே!

    அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே!

  48. தாவீது பாடிய பாடல்.

    1 தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது;

    நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்;

    என்னுடைய மகிமையும் பாடும்.

    2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்,

    நான் அதிகாலையில் விழிப்பேன்.

    3 யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;

    தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

  49. 10 யெகோவாவுக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணமகன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணமகள் நகைகளினால் தன்னைச் அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் பாதுகாப்பின் ஆடைகளை எனக்குப்போட்டு, நீதியின் சால்வையை எனக்கு அணிவித்தார். 11 பூமி தன் தாவரங்களை முளைக்கச்செய்வது போலவும், தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைக்கச்செய்வது போலவும், யெகோவாவாகிய ஆண்டவர் எல்லா தேசங்களுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கச்செய்வார்.

  50. 11 இன்னும் கொண்டாட்டத்தின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணமகனின் சத்தமும், மணமகளின் சத்தமும்: சேனைகளின் யெகோவாவை துதியுங்கள், யெகோவா நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், யெகோவாவுடைய ஆலயத்திற்கு நன்றி பலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்தது போல இருப்பதற்கு தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

  51. 37 அவர் ஒலிவமலையின் அடிவாரத்திற்கு அருகில் வந்தபோது திரளான கூட்டமாகிய சீடர்களெல்லோரும் தாங்கள் பார்த்த எல்லா அற்புதங்களையுங்குறித்து சந்தோஷப்பட்டு, 38 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜா போற்றப்படத்தக்கவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்று மிகுந்த சத்தமாக தேவனைப் புகழ்ந்தார்கள்.

  52. 9 இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, எல்லாத் தேசங்களிலும் கோத்திரங்களிலும் மக்களிலும் மொழிக்காரர்களிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணிப்பார்க்க முடியாத திரளான மக்கள்கூட்டம், வெள்ளை அங்கிகளை அணிந்து, தங்களுடைய கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதைக் கண்டேன். 10 அவர்கள் அதிக சத்தமாக: இரட்சிப்பு, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்களுடைய தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரியது என்று ஆர்ப்பரித்தார்கள். 11 தூதர்கள் எல்லோரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சுற்றிநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: 12 ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.

  53. 47 எங்கள் தேவனாகிய யெகோவாவே,

    நாங்கள் உமது பரிசுத்தப் பெயரைப் போற்றி,

    உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களைக் காப்பாற்றி,

    எங்களைத் தேசங்களிலிருந்து சேர்த்தருளும்.

    48 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா

    அநாதியாக என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்.

    மக்களெல்லோரும் ஆமென், என்பார்களாக,

    அல்லேலூயா.

  54. 164 உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.

  55. 13 அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்;

    அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது;

    அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.

    14 அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும்,

    தம்மைச் சேர்ந்த மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கும் கொண்டாட்டமாக,

    தம்முடைய மக்களுக்கு ஒரு கொம்பை உயர்த்தினார்.

    அல்லேலூயா.

  56. 2 அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்;

    மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.

  57. 10 ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் முற்பிதாவாகிய இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, எல்லாக் காலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 11 யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர். 12 ஐசுவரியமும் புகழும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சக்தியும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். 13 இப்போதும் எங்களுடைய தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.

  58. 6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்;

    நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.

    7 தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.

  59. 8 தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி,

    பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,

    9 அவருடைய கிருபையினிமித்தமும்,

    மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.

  60. 46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாக தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்புசித்து மகிழ்ச்சியோடும் கபடம் இல்லாத இருதயத்தோடும் சாப்பிட்டு, 47 தேவனைத் துதித்து, மக்களெல்லோரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். மீட்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

  61. 15 இப்படியிருக்க, செய்யவேண்டியதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் செய்வேன்; கருத்தோடும் விண்ணப்பம் செய்வேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். 16 இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம் செய்யும்போது, படிப்பறியாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது என்னவென்று அவனுக்குத் தெரியாதே. 17 நீ நன்றாக ஸ்தோத்திரம் செய்கிறாய், ஆனாலும் மற்றவன் பக்திவளர்ச்சியடையமாட்டானே.

  62. 1 அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு:

    யெகோவாவைப் பாடுவேன்;

    “அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்;

    குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.

    2 யெகோவா என்னுடைய பெலனும்

    என்னுடைய கீதமுமானவர்;

    அவர் எனக்கு இரட்சிப்புமானவர்;

    அவரே என்னுடைய தேவன்,

    அவருக்கு வாசஸ்தலத்தை

    ஆயத்தம்செய்வேன்;

    அவரே என் தகப்பனுடைய தேவன்,

    அவரை உயர்த்துவேன்;

  63. 10 சிற்ப ஆசாரிகள் யெகோவாவுடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, யெகோவாவை துதிப்பதற்கு, ஆடைகளை அணிந்து, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்களையும், தாளங்களைத் தட்டுகிற ஆசாபின் மகனாகிய லேவியர்களையும் நிறுத்தினார்கள். 11 யெகோவா நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கும்போது, மாறிமாறிப் பாடினார்கள்; யெகோவாவை துதிக்கும்போது, மக்கள் எல்லோரும் யெகோவாவுடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுவதினால் மகா கெம்பீரமாக ஆர்ப்பரித்தார்கள்.

  64. 32 பூமியின் ராஜ்ஜியங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைப் புகழ்ந்துபாடுங்கள். (சேலா)

    33 ஆரம்பமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்;

    இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாக முழங்கச்செய்கிறார்.

    34 தேவனுடைய வல்லமையைப் பிரபலப்படுத்துங்கள்;

    அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது.

  65. 34 வானமும் பூமியும் கடல்களும் அவைகளில் வாழ்கிற அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்.

  66. 21 என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக;

    மாம்ச சரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை

    எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும்.

  67. 7 யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்;

    நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.

    8 அவர் வானத்தை மேகங்களால் மூடி,

    பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி,

    மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.

  68. 13 யெகோவாவைப் பாடுங்கள், யெகோவாவை துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கையிலிருந்து காப்பாற்றுகிறார்.

  69. 3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், எல்லாவிதமான ஆறுதலின் தேவனுமாக இருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். 4 தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எப்படிப்பட்ட உபத்திரவங்களிலும் இருப்பவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்கிறவர்களாவதற்கு, எங்களுக்கு வரும் எல்லா உபத்திரவங்களிலும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.

  70. 2 அல்லாமலும், பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர்கள் தங்களுடைய சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது. 3 அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம் நபர்களைத்தவிர வேறொருவரும் கற்றுக்கொள்ளமுடியாமல் இருந்தது.

  71. 46 யெகோவா உயிருள்ளவர்;

    என்னுடைய கன்மலையானவர் துதிக்கப்படுவாராக;

    என்னுடைய இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.

    47 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன்.

    அவர் மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.

    48 அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்;

    எனக்கு விரோதமாக எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி,

    கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.

  72. 4 தேவனைப் பாடி, அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்;

    வனாந்திரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்;

    அவருடைய பெயர் யெகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.

    5 தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன்,

    திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாக இருக்கிறார்.

  73. 1 அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்;

    யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.

    2 இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.