63 Bible Verses About Being In Love
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
-
1 சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.
மணவாளி
2 நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக:
உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது.
3 உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்;
உமது நாமம் ஊற்றப்பட்ட நறுமணமுள்ள தைலமாக இருக்கிறது;
ஆகையால் இளம்பெண்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
4 என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்;
ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்;
நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்;
திராட்சைரசத்தைவிட உமது நேசத்தை நினைப்போம்;
உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
5 எருசலேமின் பெண்களே! கேதாரின் கூடாரங்களைப்போலவும்,
சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாக இருந்தாலும்,
அழகாக இருக்கிறேன்.
6 நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்;
வெயில் என்மேல் பட்டது;
என் சகோதரர்கள் என்மேல் கோபமாயிருந்து,
என்னைத் திராட்சைத் தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்;
என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
7 என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து,
அதை மத்தியானத்தில் எங்கே சேர்க்கிறீர்?
எனக்குச் சொல்லும்;
உமது தோழர்களின் மந்தைகளின் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?
மணவாளன்
8 பெண்களில் அழகு மிகுந்தவளே!
அதை நீ அறியவில்லையென்றால், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய்,
மேய்ப்பர்களுடைய கூடாரங்களுக்கு அருகில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
-
மணவாளியின் தோழிகள்
5 தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு
வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்?
மணவாளி
கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்;
அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்;
அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.
6 நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும்,
உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்;
நேசம் மரணத்தைப்போல் வலிமையானது;
நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது;
அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது.
7 திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது,
வெள்ளங்களும் அதைத் தணிக்கமுடியாது;
ஒருவன் தன் வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் நேசத்திற்காகக் கொடுத்தாலும்,
அது முற்றிலும் அசட்டைசெய்யப்படும்.
மணவாளியின் சகோதரன்
8 நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு,
அவளுக்கு மார்பகங்கள் இல்லை;
நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?
9 அவள் ஒரு மதிலானால்,
அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்;
அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
மணவாளி
10 நான் மதில்தான்,
என் மார்பகங்கள் கோபுரங்கள்;
அவருடைய கண்களில் இரக்கம் பெறலானேன்.
மணவாளன்
11 பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது,
அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக,
ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசுகளைக் கொண்டுவரும்படி விட்டார்.
12 என் திராட்சைத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது;
சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும்,
அதின் பழத்தைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.
-
1 இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்;
தேடியும் நான் அவரைக் காணவில்லை.
2 நான் எழுந்து, நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் சுற்றி,
என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்;
தேடியும் நான் அவரைக் காணவில்லை.
3 நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்:
என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
4 நான் அவர்களைவிட்டுக் கொஞ்சதூரம் சென்றவுடனே,
என் ஆத்தும நேசரைக் கண்டேன்;
நான் அவரை என் தாயின் வீட்டிலும்,
என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடும்வரைக்கும் அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்.
5 எருசலேமின் இளம்பெண்களே!
எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை
நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்கும்படி,
வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும்
உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
-
மணவாளி
6 வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும்
வியாபாரிகளுடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி,
தூபமேகத்தைப்போல் வனாந்திரத்திலிருந்து வருகிற இவர் யார்?
7 இதோ, சாலொமோனுடைய படுக்கை;
இஸ்ரவேலின் பலசாலிகளில் அறுபது பலசாலிகள் அதைச் சுற்றிலும் நிற்கிறார்கள்.
8 இவர்களெல்லோரும் பட்டயம் பிடித்து,
போருக்குப் பயிற்சிபெற்றவர்களாக இருக்கிறார்கள்;
இரவுநேர பயத்தினாலே அவனவனுடைய பட்டயம் அவனவன் இடுப்பிலிருக்கிறது.
9 சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைச் செய்வித்தார்.
10 அதின் தூண்களை வெள்ளியினாலும்,
அதின் தளத்தைப் பொன்னினாலும்,
அதின் இருக்கையை இரத்தாம்பரத்தினாலும் செய்வித்தார்;
அதின் உட்புறத்திலே எருசலேமின் இளம்பெண்களினிமித்தம்
நேசம் என்னும் சமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது.
11 சீயோனின் இளம்பெண்களே! நீங்கள் புறப்பட்டுப்போய்,
ராஜாவாகிய சாலொமோனின் திருமணநாளிலும்,
மனமகிழ்ச்சியின் நாளிலும்,
அவருடைய தாயார் அவருக்கு
அணிவித்த கிரீடத்துடன் இருக்கிற அவரைப் பாருங்கள்.
-
மணவாளன்
4 என் பிரியமே! நீ திர்சாவைப்போல் அழகும்,
எருசலேமைப்போல் வடிவமும்,
கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவள்.
5 உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு,
அவைகள் என்னை வென்றது;
உன் கருமையான கூந்தல்
கீலேயாத் மலையிலே இலைகள்மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.
6 உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும்,
ஒன்றாகிலும் மலடாக இல்லாமல்
இரட்டைக்குட்டிகளை ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.
7 உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.
8 ராணிகள் அறுபதுபேரும்,
மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு;
கன்னியர்களுக்குத் தொகையில்லை.
9 என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே;
அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை;
அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்;
இளம்பெண்கள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்;
ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.
10 சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும்,
கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவளாக,
சூரிய உதயம்போல் உதிக்கிற இவள் யார்?
-
9 13 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும்,
உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசச்செய்கிறதுமான,
நல்ல திராட்சைரசத்தைப்போல் இருக்கிறது.
மணவாளி
10 நான் என் நேசருடையவள்,
அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது.
11 வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய்,
கிராமங்களில் தங்குவோம்.
12 அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்;
திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும்,
மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்;
அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
13 தூதாயீம் பழம் வாசனை வீசும்;
நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு;
என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.
-
10 என் நேசர் என்னோடே பேசி:
மணவாளன்
என் பிரியமே!
என் அழகு மிகுந்தவளே! எழுந்துவா.
11 இதோ, மழைக்காலம் சென்றது,
மழைபெய்து ஓய்ந்தது.
12 பூமியிலே மலர்கள் காணப்படுகிறது;
குருவிகள் பாடும் காலம் வந்தது,
காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.
13 அத்திமரம் காய்காய்த்தது;
திராட்சைக்கொடிகள் பூப்பூத்து
வாசனையும் நறுமணத்தையும் கொடுக்கிறது;
என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே!
நீ எழுந்து வா.
14 கன்மலையின் வெடிப்புகளிலும்,
மலையுச்சிகளின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே!
உன் முகத்தோற்றத்தை எனக்குக் காட்டு,
உன் சத்தத்தை நான் கேட்கட்டும்;
உன் சத்தம் இன்பமும்,
உன் முகத்தோற்றம் அழகுமாக இருக்கிறது என்றார்.
15 திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும்
சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்;
நம்முடைய திராட்சைத்தோட்டங்கள்
பூவும் பிஞ்சுமாக இருக்கிறதே.
-
12 என் சகோதரியே! என் மணவாளியே!
நீ அடைக்கப்பட்ட தோட்டமும்,
மறைவு கட்டப்பட்ட நீரூற்றும்,
பாதுகாக்கப்பட்ட கிணறுமாக இருக்கிறாய்.
13 உன் தோட்டம் மாதுளம்செடிகளும்,
அருமையான பழமரங்களும்,
மருதாணிச் செடிகளும், நளதச்செடிகளும்,
14 நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும்,
சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும்,
சந்தன மரங்களும், சகலவித கந்தவர்க்கச் செடிகளுமுள்ள சிங்கார வனமாக இருக்கிறது.
15 தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் கிணறும்,
லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.
மணவாளி
16 வாடைக்காற்றே! எழும்பு;
தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு;
என் நேசர் தம்முடைய தோட்டத்திற்கு வந்து,
தமது அருமையான பழங்களைச் சாப்பிடுவாராக.
-
4 என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார்,
அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.
5 என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்;
பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும்,
என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
6 என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்;
என் நேசரோ இல்லை, போய்விட்டார்;
அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று.
அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை;
அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதில் கொடுக்கவில்லை.
7 நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு,
என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்;
மதிலின் காவற்காரர்கள் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.
8 எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால்,
நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
-
மணவாளியின் தோழிகள்
1 உன் நேசர் எங்கே போனார்?
பெண்களில் அழகுமிகுந்தவளே!
உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்?
உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.
மணவாளி
2 தோட்டங்களில் மேயவும், லீலிமலர்களைப் பறிக்கவும்,
என் நேசர் தமது தோட்டத்திற்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.
3 நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்;
அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.
-
11 பள்ளத்தாக்கிலே பழுத்த பழங்களைப் பார்க்கவும்,
திராட்சைச்செடிகள் துளிர்விட்டு, மாதுளம்செடிகள் பூத்ததா என்று அறியவும்,
வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.
12 நினைக்காததற்குமுன்னே
என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கினது.
மணவாளியின் தோழிகள்
13 திரும்பிவா, திரும்பிவா,
சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு,
திரும்பிவா, திரும்பிவா.
மணவாளி
சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்?
அவள் இரண்டு படையின் கூட்டத்திற்குச் சமானமானவள்.
-
1 ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போல் இருந்தீரானால்,
நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்;
என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.
2 நான் உம்மைக் கூட்டிக்கொண்டு,
என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்;
நீர் எனக்குப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும்,
என் மாதுளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.
3 அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கும்,
அவருடைய வலதுகை என்னை அணைக்கும்.
4 எருசலேமின் இளம்பெண்களே!
எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை
நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்க
உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
-
29 தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலைப்போல பரந்த புரிந்துகொள்ளும் திறனையும் கொடுத்தார். 30 சகல கிழக்குப்பகுதி மக்களின் ஞானத்தையும் எகிப்தியர்களின் சகல ஞானத்தையும்விட சாலொமோனின் ஞானம் சிறந்ததாக இருந்தது. 31 அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் மகன்களிலும், மற்ற எல்லா மனிதர்களிலும் ஞானவானாக இருந்தான்; சுற்றிலும் இருந்த சகல தேசங்களிலும் அவன் புகழ் பிரபலமாக இருந்தது. 32 அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து. 33 லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊருகிற பிராணிகள் மீன்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் சொன்னான். 34 சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் எல்லா ராஜாக்களிடத்திலுமிருந்தும் எல்லா தேசத்து மக்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்பதற்கு வந்தார்கள்.
-
9 என் பிரியமே!
பார்வோனுடைய இரதங்களில் பூட்டப்பட்டிருக்கிற பெண்குதிரைக் கூட்டத்திற்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
10 அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும்,
ஆரங்கள் அணிந்த உன் கழுத்தும் அழகாக இருக்கிறது.
மணவாளி
11 வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம்.
12 ராஜா தமது பந்தியிலிருக்கும்வரை
என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும்.
13 என் நேசர் எனக்கு என் மார்பகங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.
14 என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சைத்தோட்டங்களில்
முளைக்கும் மருதாணிப் பூங்கொத்து.
-
4 என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்;
என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.
5 திராட்சைரசத்தால் என்னைத் தேற்றுங்கள்,
கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்;
நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.
-
மணவாளி
16 என் நேசர் என்னுடையவர்,
நான் அவருடையவள்.
அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.
17 என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி,
நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும்,
நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில்
குதித்துவரும் கலைமானுக்கும்
மரைகளின் குட்டிக்கும் சமானமாக இரும்.
-
மணவாளன்
1 நீ அழகு மிகுந்தவள், என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்;
உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களைப்போல் இருக்கிறது;
உன் கூந்தல் கீலேயாத் மலையில் இலைகளை மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போல் இருக்கிறது.
2 உன்னுடைய பற்கள்,
ரோமம் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும்,
ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் அனைத்தும் இரட்டைக்குட்டி ஈன்றவைகளுமான
ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.
3 உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும்,
உன் வாய் இன்பமுமாக இருக்கிறது;
உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.
4 உன்னுடைய கழுத்து,
பராக்கிரமசாலிகளின் ஆயிரம் கேடகங்கள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட
தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது.
5 உன் இரண்டு மார்பகங்களும்
லீலிமலர்களுக்கு இடையில் மேயும்
வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.
-
மணவாளன்
1 இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள்
மிகவும் அழகாக இருக்கிறது;
உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க
தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது.
2 உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது;
உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது.
3 உன் இரண்டு மார்பகங்களும்
வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாக இருக்கிறது.
4 உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும்,
உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம்
வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும்,
உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும்
லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.
5 உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது;
உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது;
ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார்.
6 மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே!
நீ எவ்வளவு அழகுமிகுந்தவள்,
நீ எவ்வளவு இன்பமுள்ளவள்.
7 உன் உயரம் பனைமரத்தைப்போலவும்,
உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது.
8 நான் பனைமரத்தில் ஏறி,
அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்;
இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும்,
உன் மூக்கின் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.
-
10 உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது;
என் சகோதரியே! என் மணவாளியே!
திராட்சைரசத்தைவிட
உன் நேசம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது!
சகல கந்தவர்க்கங்களைவிட
உன் நறுமண தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
11 என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது,
உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது,
உன் உடைகளின் வாசனை லீபனோனின் வாசனைக்கு ஒப்பாக இருக்கிறது.
-
13 தோட்டங்களில் குடியிருக்கிறவளே!
தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்;
நானும் அதைக் கேட்கட்டும்.
மணவாளி
14 என் நேசரே! விரைவாக வாரும்,
கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள
வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.
-
16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். 17 உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
-
1 ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் மகளை நேசித்ததுமட்டுமல்லாமல், மோவாபியர்களும், அம்மோனியர்களும், ஏதோமியர்களும், சீதோனியர்களும், ஏத்தியர்களுமாகிய அந்நியர்களான அநேக பெண்கள்மேலும் ஆசைவைத்தான். 2 யெகோவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: நீங்கள் அவர்களுக்குள்ளும் அவர்கள் உங்களுக்குள்ளும் நுழையக்கூடாது; அவர்கள் நிச்சயமாகத் தங்கள் தெய்வங்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைத் திருப்புவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாக இருந்தான். 3 அவனுக்கு ராஜ பரம்பரையுள்ள 700 மனைவிகளும், 300 மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய பெண்கள் அவனுடைய இருதயத்தைத் திரும்பச்செய்தார்கள். 4 சாலொமோனுக்கு வயதானபோது, அவனுடைய மனைவிகள் அவனுடைய இருதயத்தை அந்நிய தெய்வங்களைப் பின்பற்றும்படி திருப்பிவிட்டார்கள்; அதினால் அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயம் யெகோவாவிடத்தில் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டதைப்போல, சாலொமோனின் இருதயம் தன்னுடைய தேவனாகிய யெகோவாவோடு முழுமையாக அர்ப்பணிக்கப்படவில்லை.
-
1 நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிமலராக இருக்கிறேன்.
மணவாளன்
2 முட்களுக்குள்ளே லீலிமலர் எப்படியிருக்கிறதோ,
அப்படியே இளம்பெண்களுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.
-
மணவாளன்
7 எருசலேமின் இளம்பெண்களே!
எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை
நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும்,
எழுப்பாமலும் இருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
-
4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது, 5 அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது, 6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். 7 எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும். 8 அன்பு ஒருபோதும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோகும், அந்நிய மொழிகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோகும்.
-
25 கணவர்களே, உங்களுடைய மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து, 26 தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குகிறதற்கும், 27 கறையேதும்இல்லாமல் பரிசுத்தமும் பிழை இல்லாததுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். 28 அப்படியே, கணவர்களும் தங்களுடைய மனைவிகளைத் தங்களுடைய சொந்த சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல் அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான். 29 தன் சொந்த சரீரத்தைப் பகைத்தவன் ஒருவனும் இல்லையே; கர்த்தர் சபையைப் பேணிக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் சரீரத்தைப் பேணிக்காப்பாற்றுகிறான். 30 நாம் அவருடைய சரீரத்தின் பாகங்களாகவும், அவருடைய சரீரத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறோம். 31 இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள். 32 இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். 33 எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும்.
-
12 ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு; 13 ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். 14 இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள். 15 தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள். 16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி; 17 வார்த்தையினாலாவது செயல்களினாலாவது, நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
-
8 லீபனோனிலிருந்து என்னோடே வா,
என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா.
அமனாவின் உச்சியிலிருந்தும்,
சேனீர் எர்மோனின் உச்சியிலிருந்தும்,
சிங்கங்களின் குகைகளிலிருந்தும்,
சிறுத்தைகளின் மலைகளிலிருந்தும் கீழே இறங்கி வா.
9 என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்;
என் சகோதரியே! என் மணவாளியே!
உன் கண்களில் ஒன்றிலும்
உன் கழுத்திலுள்ள ஒரு நகையிலும்
என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.
-
மணவாளி
2 நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது;
கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்:
என் சகோதரியே! என் பிரியமே!
என் புறாவே! என் உத்தமியே!
கதவைத் திற;
என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
3 என் உடையைக் கழற்றிப்போட்டேன்;
நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன்,
என் பாதங்களைக் கழுவினேன்,
நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.
-
16 தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். 17 நியாயத்தீர்ப்புநாளிலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோம். 18 அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தை வெளியே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் இல்லை. 19 அவர் முதலாவது நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம். 20 தேவனிடத்தில் அன்பு கூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு செலுத்துவான்? 21 தேவனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கட்டளையை அவராலே பெற்றிருக்கிறோம்.
-
மணவாளன்
1 என் சகோதரியே! என் மணவாளியே!
நான் என் தோட்டத்திற்கு வந்தேன்,
என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்;
என் தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்;
என் திராட்சைரசத்தை என் பாலோடும் குடித்தேன்.
சிநேகிதர்களே! சாப்பிடுங்கள்; பிரியமானவர்களே!
குடியுங்கள், திருப்தியாகக் குடியுங்கள்.
-
37 இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக; 38 இது முதலாம் பெரிய கட்டளை. 39 இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே. 40 இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
-
16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம். 17 ஒருவன் இந்த உலகத்தின் செல்வம் உடையவனாக இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று அறிந்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைபெறுகிறது எப்படி? 18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் பேச்சினாலுமல்ல, செயல்களினாலும் உண்மையினாலும் அன்பு செலுத்துவோம். 19 இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்கள் என்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
-
7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாக இருப்போம்; ஏனென்றால், அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். 8 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
-
மணவாளன்
15 என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்;
நீ மிக அழகுள்ளவள்;
உன் கண்கள் புறாக்கண்கள்.
மணவாளி
16 நீர் ரூபமுள்ளவர்;
என் நேசரே! நீர் இன்பமானவர்;
நம்முடைய படுக்கை பசுமையானது.
17 நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம்,
நம்முடைய வீட்டின் மேல்தளம் தேவதாரு மரம்.
-
6 பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும்,
நான் வெள்ளைப்போளமலைக்கும் சாம்பிராணிமலைக்கும் போயிருப்பேன்.
7 என் பிரியமே! நீ பூரண அழகுமிகுந்தவள்;
உன்னில் குறையொன்றும் இல்லை.
-
12 நான் உங்களில் அன்பாக இருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கட்டளையாக இருக்கிறது. 13 ஒருவன் தன் நண்பனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.
-
6 அப்பொழுது திரளான மக்கள் போடும் ஆரவாரம்போலவும்,
பெரியவெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி:
அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம்.
ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் வந்தது,
அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்று சொல்லக்கேட்டேன்.
8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடை அணிந்துகொள்ளும்படி அவளுக்கு தரப்பட்டது; அந்த மெல்லிய ஆடை பரிசுத்தவான்களுடைய நீதிகளே. 9 பின்னும், அவன் என்னைப் பார்த்து: “ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
-
23 அப்பொழுது ஆதாம்: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாக இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டதால் மனுஷி எனப்படுவாள்” என்றான். 24 இதன் காரணமாக மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாக இருப்பார்கள்.
-
15 பிடித்த கூலியில்லா வேலையாட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் யெகோவாவுடைய ஆலயத்தையும், தன்னுடைய அரண்மனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான். 16 கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர் பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியர்களைக் கொன்றுபோட்டு, அதை சாலொமோனின் மனைவியாகிய தன்னுடைய மகளுக்கு சீதனமாகக் கொடுத்திருந்தான். 17 சாலொமோன் அந்தக் கேசேர் பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும், 18 பாலாத்தையும், வனாந்திரத்திலுள்ள தாமாரையும், 19 தனக்கு இருக்கிற எல்லாவற்றையும் சேமித்துவைக்கும் எல்லாப் பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர்கள் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாட்சி செய்த தேசமெங்கும் தனக்கு விருப்பமானதையெல்லாம் கட்டினான்.
-
மணவாளி
3 காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ,
அப்படியே இளம் ஆண்களுக்குள்ளே என் நேசர் இருக்கிறார்;
அதின் நிழலிலே ஆர்வமுடன் உட்காருகிறேன்,
அதின் பழம் என் வாய்க்கு இனிப்பாக இருக்கிறது.
-
மணவாளி
8 இது என் நேசருடைய சத்தம்!
இதோ, அவர் மலைகளின்மேல் குதித்தும் மேடுகளின்மேல் துள்ளியும் வருகிறார்.
9 என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாக இருக்கிறார்;
இதோ, அவர் எங்கள் மதிலுக்கு வெளியே நின்று
சன்னல் வழியாகப் பார்த்து,
தட்டியின் வழியாகத் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.
-
16 அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது;
அவர் முற்றிலும் அழகுள்ளவர்.
இவரே என் நேசர்; எருசலேமின் இளம்பெண்களே! இவரே என் சிநேகிதர்.
-
30 உன் தேவனாகிய கர்த்தரிடம் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக என்பதே பிரதான கட்டளை. 31 இதற்கு ஒப்பாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே; இவைகளைவிட பெரிய கட்டளை வேறொன்றும் இல்லை என்றார். 32 அதற்கு வேதபண்டிதன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. 33 முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறதும், தன்னிடத்தில் அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்தில் அன்பு செலுத்துகிறதுதான் தகனபலிகளையும் மற்ற எல்லா பலிகளையும்விட முக்கியமாக இருக்கிறது என்றான்.
-
2 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் அதிக பொறுமையும் உள்ளவர்களாக, அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, 3 சமாதானக்கட்டினால் ஆவியானவர் தரும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு கவனமாக இருங்கள்.
-
8 இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பினாலே உங்களெல்லோரையும் காண எவ்வளவோ ஆவலாக இருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி. 9 மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும்,
-
1 அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, 2 போதனை இல்லாமல், மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். 3 முடியைப் பின்னி, தங்க ஆபரணங்களை அணிந்து, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிற வெளிப்புற அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாக இல்லாமல், 4 அழியாத அலங்கரிப்பாக இருக்கிற சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாக இருக்கவேண்டும்; அதுவே தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தது. 5 இப்படியே ஆதிக்காலங்களில் தேவனிடம் நம்பிக்கையாக இருந்த பரிசுத்தப் பெண்களும் தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். 6 அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்.
-
20 அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருடங்கள் வேலை செய்தான்; அவள் மேலிருந்த பிரியத்தினாலே அந்த வருடங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.
-
18 பழிக்குப்பழி வாங்காமலும் உன் மக்கள்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் யெகோவா.
-
26 ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் செங்கடலின் கரையிலே ஏலாத்திற்கு அருகிலுள்ள எசியோன் கேபேரிலே கப்பல்களைச் செய்தான். 27 அந்தக் கப்பல்களில், கடல் பயணத்தில் பழகின கப்பலாட்களாகிய தன்னுடைய வேலைக்காரர்களை ஈராம் சாலொமோனுடைய வேலைக்காரர்களோடு அனுப்பினான். 28 அவர்கள் ஓப்பீருக்குப்போய், அந்த இடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடம் கொண்டுவந்தார்கள்.
-
1 பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும், 2 நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான். 3 பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள். 4 அபிசுவா, நாகாமான், அகோவா, 5 கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள். 6 கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
-
15 உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும்,
உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி.
16 உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும்
உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
17 அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல்,
உனக்கே உரியவைகளாக இருப்பதாக.
18 உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக;
உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு.
19 அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும்,
அழகான வரையாடும்போல இருப்பாளாக;
அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்;
அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.
20 என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து,
அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன?
-
13 அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும்,
வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது;
அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது,
வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
-
37 தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை. 38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை. 39 தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
-
15 நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.
-
6 அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார். 7 நீதிமானுக்காக ஒருவன் இறப்பது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். 8 நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார். 9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, தேவனுடைய கோபத்திற்குத் தப்பி அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே. 10 நாம் தேவனுக்கு பகைவர்களாக இருக்கும்போது, அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோம் என்றால், ஒப்புரவாக்கப்பட்டப்பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே. 11 அதுமட்டும் இல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக நாம் தேவனுக்குள் களிகூறுகிறோம்.
-
9 உங்களுடைய அன்பு மாயமில்லாமல் இருக்கட்டும், தீமையை வெறுத்து, நன்மையைப் பிடித்துக்கொண்டிருங்கள். 10 சகோதர அன்பினாலே ஒருவர்மேல் ஒருவர் பாசமாக இருங்கள்; மரியாதை கொடுக்கிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
-
9 ஆனாலும் அவர்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாதிருந்தால் திருமணம்செய்துகொள்ளக்கடவர்கள்; வேகிறதைவிட திருமணம்செய்கிறது நல்லது.
-
23 ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்; 24 அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். 25 இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மீண்டும் உங்களிடம் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவிற்குள் பெருகுவதற்காக, 26 உங்களுடைய விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடும் இருப்பேன் என்று அறிந்திருக்கிறேன்.
-
12 நாங்கள் உங்களிடம் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக, நீங்களும் ஒருவரிலொருவர் வைக்கும் அன்பிலும் மற்ற எல்லா மனிதர்களிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து, 13 இவ்விதமாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடும்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கும்படி உங்களுடைய இருதயங்களைப் பலப்படுத்துவாராக.
-
8 நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவரை நேசிக்கிறீர்கள்; இப்பொழுது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவர்மேல் விசுவாசம் வைத்து, சொல்லமுடியாததும், மகிமையினால் நிறைந்ததுமாக இருக்கிற சந்தோஷம் உள்ளவர்களாகக் களிகூர்ந்து,
-
8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
-
4 ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு.
Shows Read in context, Share and Copy.