21 Bible Verses About True Love
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
-
9 என் பிரியமே!
பார்வோனுடைய இரதங்களில் பூட்டப்பட்டிருக்கிற பெண்குதிரைக் கூட்டத்திற்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
10 அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும்,
ஆரங்கள் அணிந்த உன் கழுத்தும் அழகாக இருக்கிறது.
மணவாளி
11 வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம்.
12 ராஜா தமது பந்தியிலிருக்கும்வரை
என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும்.
13 என் நேசர் எனக்கு என் மார்பகங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.
14 என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சைத்தோட்டங்களில்
முளைக்கும் மருதாணிப் பூங்கொத்து.
மணவாளன்
15 என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்;
நீ மிக அழகுள்ளவள்;
உன் கண்கள் புறாக்கண்கள்.
மணவாளி
16 நீர் ரூபமுள்ளவர்;
என் நேசரே! நீர் இன்பமானவர்;
நம்முடைய படுக்கை பசுமையானது.
17 நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம்,
நம்முடைய வீட்டின் மேல்தளம் தேவதாரு மரம்.
-
18 எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு,
என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு.
19 அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும்,
கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும்,
ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே.
-
6 நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும்,
உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்;
நேசம் மரணத்தைப்போல் வலிமையானது;
நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது;
அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது.
7 திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது,
வெள்ளங்களும் அதைத் தணிக்கமுடியாது;
ஒருவன் தன் வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் நேசத்திற்காகக் கொடுத்தாலும்,
அது முற்றிலும் அசட்டைசெய்யப்படும்.
-
மணவாளன்
1 நீ அழகு மிகுந்தவள், என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்;
உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களைப்போல் இருக்கிறது;
உன் கூந்தல் கீலேயாத் மலையில் இலைகளை மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போல் இருக்கிறது.
2 உன்னுடைய பற்கள்,
ரோமம் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும்,
ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் அனைத்தும் இரட்டைக்குட்டி ஈன்றவைகளுமான
ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.
3 உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும்,
உன் வாய் இன்பமுமாக இருக்கிறது;
உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.
4 உன்னுடைய கழுத்து,
பராக்கிரமசாலிகளின் ஆயிரம் கேடகங்கள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட
தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது.
5 உன் இரண்டு மார்பகங்களும்
லீலிமலர்களுக்கு இடையில் மேயும்
வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.
6 பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும்,
நான் வெள்ளைப்போளமலைக்கும் சாம்பிராணிமலைக்கும் போயிருப்பேன்.
7 என் பிரியமே! நீ பூரண அழகுமிகுந்தவள்;
உன்னில் குறையொன்றும் இல்லை.
8 லீபனோனிலிருந்து என்னோடே வா,
என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா.
அமனாவின் உச்சியிலிருந்தும்,
சேனீர் எர்மோனின் உச்சியிலிருந்தும்,
சிங்கங்களின் குகைகளிலிருந்தும்,
சிறுத்தைகளின் மலைகளிலிருந்தும் கீழே இறங்கி வா.
9 என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்;
என் சகோதரியே! என் மணவாளியே!
உன் கண்களில் ஒன்றிலும்
உன் கழுத்திலுள்ள ஒரு நகையிலும்
என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.
10 உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது;
என் சகோதரியே! என் மணவாளியே!
திராட்சைரசத்தைவிட
உன் நேசம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது!
சகல கந்தவர்க்கங்களைவிட
உன் நறுமண தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
11 என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது,
உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது,
உன் உடைகளின் வாசனை லீபனோனின் வாசனைக்கு ஒப்பாக இருக்கிறது.
12 என் சகோதரியே! என் மணவாளியே!
நீ அடைக்கப்பட்ட தோட்டமும்,
மறைவு கட்டப்பட்ட நீரூற்றும்,
பாதுகாக்கப்பட்ட கிணறுமாக இருக்கிறாய்.
13 உன் தோட்டம் மாதுளம்செடிகளும்,
அருமையான பழமரங்களும்,
மருதாணிச் செடிகளும், நளதச்செடிகளும்,
14 நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும்,
சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும்,
சந்தன மரங்களும், சகலவித கந்தவர்க்கச் செடிகளுமுள்ள சிங்கார வனமாக இருக்கிறது.
15 தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் கிணறும்,
லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.
மணவாளி
16 வாடைக்காற்றே! எழும்பு;
தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு;
என் நேசர் தம்முடைய தோட்டத்திற்கு வந்து,
தமது அருமையான பழங்களைச் சாப்பிடுவாராக.
-
மணவாளி
8 இது என் நேசருடைய சத்தம்!
இதோ, அவர் மலைகளின்மேல் குதித்தும் மேடுகளின்மேல் துள்ளியும் வருகிறார்.
9 என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாக இருக்கிறார்;
இதோ, அவர் எங்கள் மதிலுக்கு வெளியே நின்று
சன்னல் வழியாகப் பார்த்து,
தட்டியின் வழியாகத் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.
10 என் நேசர் என்னோடே பேசி:
மணவாளன்
என் பிரியமே!
என் அழகு மிகுந்தவளே! எழுந்துவா.
11 இதோ, மழைக்காலம் சென்றது,
மழைபெய்து ஓய்ந்தது.
12 பூமியிலே மலர்கள் காணப்படுகிறது;
குருவிகள் பாடும் காலம் வந்தது,
காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.
13 அத்திமரம் காய்காய்த்தது;
திராட்சைக்கொடிகள் பூப்பூத்து
வாசனையும் நறுமணத்தையும் கொடுக்கிறது;
என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே!
நீ எழுந்து வா.
14 கன்மலையின் வெடிப்புகளிலும்,
மலையுச்சிகளின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே!
உன் முகத்தோற்றத்தை எனக்குக் காட்டு,
உன் சத்தத்தை நான் கேட்கட்டும்;
உன் சத்தம் இன்பமும்,
உன் முகத்தோற்றம் அழகுமாக இருக்கிறது என்றார்.
15 திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும்
சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்;
நம்முடைய திராட்சைத்தோட்டங்கள்
பூவும் பிஞ்சுமாக இருக்கிறதே.
மணவாளி
16 என் நேசர் என்னுடையவர்,
நான் அவருடையவள்.
அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.
17 என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி,
நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும்,
நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில்
குதித்துவரும் கலைமானுக்கும்
மரைகளின் குட்டிக்கும் சமானமாக இரும்.
-
மணவாளி
2 நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது;
கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்:
என் சகோதரியே! என் பிரியமே!
என் புறாவே! என் உத்தமியே!
கதவைத் திற;
என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
3 என் உடையைக் கழற்றிப்போட்டேன்;
நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன்,
என் பாதங்களைக் கழுவினேன்,
நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.
4 என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார்,
அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.
5 என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்;
பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும்,
என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
6 என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்;
என் நேசரோ இல்லை, போய்விட்டார்;
அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று.
அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை;
அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதில் கொடுக்கவில்லை.
7 நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு,
என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்;
மதிலின் காவற்காரர்கள் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.
8 எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால்,
நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
மணவாளியின் தோழிகள்
9 பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே!
மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?
நீ இப்படி எங்களை ஆணையிட,
மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?
மணவாளி
10 என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்;
பிரகாசமானவர், வல்லமையுள்ளவர்,
யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை.
11 அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது;
அவருடைய தலைமுடி சுருள் சுருளாகவும்,
காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது.
12 அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும்,
பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாகப் பதிக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது.
13 அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும்,
வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது;
அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது,
வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
14 அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது;
அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்களால் மூடப்பட்ட பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
15 அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது;
அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும்
கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது.
-
1 நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிமலராக இருக்கிறேன்.
மணவாளன்
2 முட்களுக்குள்ளே லீலிமலர் எப்படியிருக்கிறதோ,
அப்படியே இளம்பெண்களுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.
மணவாளி
3 காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ,
அப்படியே இளம் ஆண்களுக்குள்ளே என் நேசர் இருக்கிறார்;
அதின் நிழலிலே ஆர்வமுடன் உட்காருகிறேன்,
அதின் பழம் என் வாய்க்கு இனிப்பாக இருக்கிறது.
4 என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்;
என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.
5 திராட்சைரசத்தால் என்னைத் தேற்றுங்கள்,
கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்;
நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.
-
7 உன் உயரம் பனைமரத்தைப்போலவும்,
உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது.
8 நான் பனைமரத்தில் ஏறி,
அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்;
இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும்,
உன் மூக்கின் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.
9 13 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும்,
உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசச்செய்கிறதுமான,
நல்ல திராட்சைரசத்தைப்போல் இருக்கிறது.
மணவாளி
10 நான் என் நேசருடையவள்,
அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது.
11 வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய்,
கிராமங்களில் தங்குவோம்.
12 அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்;
திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும்,
மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்;
அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
13 தூதாயீம் பழம் வாசனை வீசும்;
நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு;
என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.
-
மணவாளன்
1 இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள்
மிகவும் அழகாக இருக்கிறது;
உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க
தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது.
2 உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது;
உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது.
3 உன் இரண்டு மார்பகங்களும்
வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாக இருக்கிறது.
4 உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும்,
உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம்
வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும்,
உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும்
லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.
5 உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது;
உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது;
ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார்.
-
1 நான் மனிதர்களுடைய மொழிகளையும் தூதர்களுடைய மொழிகளையும் பேசினாலும், எனக்கு அன்பு இல்லையென்றால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். 2 நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாக இருந்து, எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாக விசுவாசமும் உள்ளவனாக இருந்தாலும், அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமில்லை. 3 எனக்கு உண்டான எல்லாவற்றையும் நான் அன்னதானம் செய்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு இல்லையென்றால் எனக்கு பயன் ஒன்றுமில்லை. 4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது, 5 அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது, 6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். 7 எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும். 8 அன்பு ஒருபோதும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோகும், அந்நிய மொழிகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோகும்.
-
மணவாளன்
7 எருசலேமின் இளம்பெண்களே!
எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை
நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும்,
எழுப்பாமலும் இருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
-
21 அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
22 தேவனாகிய யெகோவா தாம் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனிதனிடத்தில் கொண்டுவந்தார். 23 அப்பொழுது ஆதாம்: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாக இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டதால் மனுஷி எனப்படுவாள்” என்றான். 24 இதன் காரணமாக மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாக இருப்பார்கள். 25 ஆதாமும் அவனுடைய மனைவியும் நிர்வாணிகளாக இருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
-
16 அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது;
அவர் முற்றிலும் அழகுள்ளவர்.
இவரே என் நேசர்; எருசலேமின் இளம்பெண்களே! இவரே என் சிநேகிதர்.
-
6 அப்பொழுது திரளான மக்கள் போடும் ஆரவாரம்போலவும்,
பெரியவெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி:
அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம்.
ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் வந்தது,
அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்று சொல்லக்கேட்டேன்.
8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடை அணிந்துகொள்ளும்படி அவளுக்கு தரப்பட்டது; அந்த மெல்லிய ஆடை பரிசுத்தவான்களுடைய நீதிகளே. 9 பின்னும், அவன் என்னைப் பார்த்து: “ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். 10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னைப் பார்த்து: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரர்களோடு நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாக இருக்கிறது என்றான்.
-
18 அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தை வெளியே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் இல்லை. 19 அவர் முதலாவது நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம்.
-
6 மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே!
நீ எவ்வளவு அழகுமிகுந்தவள்,
நீ எவ்வளவு இன்பமுள்ளவள்.
-
1 இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சைத்தோட்டத்தைக்குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சைத்தோட்டம் உண்டு.
-
16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம். 17 ஒருவன் இந்த உலகத்தின் செல்வம் உடையவனாக இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று அறிந்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைபெறுகிறது எப்படி? 18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் பேச்சினாலுமல்ல, செயல்களினாலும் உண்மையினாலும் அன்பு செலுத்துவோம். 19 இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்கள் என்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். 20 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராக இருந்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
-
8 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
-
36 போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான். 37 இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக; 38 இது முதலாம் பெரிய கட்டளை. 39 இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே.
-
8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
Shows Read in context, Share and Copy.